எழுந்துவா அழகே என்னருகே

என்னில் கலந்தவளே என்நினைவில் மிதந்ததவளே
மின்னும் அழகே மிகைத்து நிற்கும் எழில்வனமே
பென்னம் பெரிதாய் நெஞ்சில் அமர்ந்திருக்கும்
பொன்னே மணியே பூமணக்கும் நடைரதமே
முன்னே உனைக்கண்டால் முழுவதும் மறக்கின்றேன்
என்ன தான் சோதனை எதற்காக உன்னால் வேதனை
இனியும் வேண்டாம் தாமதம் எழுந்து வா என்னருகே

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (27-Aug-20, 1:05 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 284

மேலே