அவனில் நான்

நட்பு புனிதமானது
அது அன்பில் தாயானது ,
சொந்தத்தில் மேலானது
சொல்லில் அடங்காதது ,
நட்பின் ஆழம் நமக்கேயானது
நாம் என்பதில் நட்பு
நலம் என்பது நட்பில் ,
எதிரியும் இல்லை நமக்கு
இடையூறும் இல்லை இவர்க்கு,
துணிந்தவன் இவன் என்று சொல்ல
அவன் கொண்ட நட்பே காரணம் ,
நட்பு ஓன்றுதான் நானிலத்தில்
நலம் நாடா மனம் நாடும் குணம்.
உண்மை நட்பில் உயிர் கொண்டவன்
உற்ற தோழன்.
அவனே உலகை ஆளும்
திடம் கொண்டவன்
நான் என்றால் நண்பன் என்னில்
அவன் என்றால் அவனில் நான்

எழுதியவர் : பாத்திமாமலர் (27-Aug-20, 4:49 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : avanil naan
பார்வை : 304

மேலே