எழுச்சியுடன் வாழட்டும்

பயமறியா முகம்
பாலகன் தோற்றம் !
துள்ளி விளையாடுது
துடிப்பும் துணிவும் !
பொங்கி வழிகிறது
வீரமும் வேகமும் !

நிற்கும் தோரணை
தயாராகும் பாவனை !
அச்சமிலா ஆண்மை
வீழ்த்தும் பார்வை !
தமிழனின் பெருமை
உடுத்தியுள்ள ஆடை !
எழுச்சியுடன் வாழட்டும்
என்றும் இத்தலைமுறை !
இனஉணர்வு தழைக்கட்டும்
பண்பாடு நிலைக்கட்டும் !
மொழிப்பற்று பெருகட்டும்
தமிழர்நலன் காக்கட்டும் !
ஏற்றமிகு வாழ்வுடன்
என்றென்றும் நலமுடன்
அறிவுவளம் ஆயுளுடன்
குறையின்றி புகழுடன்
தமிழனென்ற செருக்குடன்
தரணியில் வாழ்ந்திடுக !


பழனி குமார்


( படத்தில் நண்பரின் மகன் )

எழுதியவர் : பழனி குமார் (28-Aug-20, 9:17 am)
பார்வை : 452

மேலே