வாழ்வியல்
நோய் தொற்று
தாய் பற்றை அதிகரித்திருக்கிறது .................
சுயநலமாய் பிரிந்துகிடந்த சுற்றங்கள்
அன்பாய் ஆரோக்கிய அறிவுரை கூறுகின்றன ..................
பிழைப்பை தேடி பறந்த பந்தங்கள் எல்லாம்
உயிரை நாடி ஊர்ப்பக்கம் திரும்பிற்று ...................
மஹால்களில் நடந்த திருமணங்கள் எல்லாம்
மனங்கள் வாழ்த்த நடக்கிறது ...............
ஓடி ஓடி உழைத்த மனிதனுக்கு
கட்டாய ஓய்விற்கு காலம் பணித்திருக்கிறது ...............
பணத்தையே பற்றியே கவலைப்பட்ட மணிதெரெல்லாம்
இன்று உடலை பற்றி வாழ்வும் யோசித்திருக்கின்றனர் .................
இயந்திரமாய் இயங்கிய உலகம்
சற்று இயற்கையின் அதிகாரத்திற்கும் இடமளித்திருக்கிறது .............
உலகத்தின் வாழ்வியல் முறையையே
ஒரே ஒரு நோய் மாற்றியிருக்கிறது !!!!!!!!!!!!!!!!!