கேளடி கண்மணி

கலாம் நீ நினைப்பதை போல் இல்லை
நீ நினைக்காதது போலும் இல்லை ...............

நீ சரியென்பது தவறாவதும்
தவறென்பது சரியாவதும் அனுவபத்திற்கு பின்னே
உன் ஆழ்மனதிற்கு புரியும் .................

பெற்றவர்களை உற்றவர்களாக கருது
உனக்காக வாழ்ந்து உனக்காகவே கரையும்
உயர்ந்த உள்ளங்கள் அது ................

நீ நினைக்கும் லட்சியங்களை அடைய
உன்னை ஏற்றிவிட காத்திருக்கும் ஏணிகள் அவர்கள்
என்றைக்கும் ஏளனம் செய்யாதே ...............

கலகம் நிறைந்த இந்த கலியுகத்தில்
கழுகுகளை அடையாளம் கண்டிட
உனக்கு அனுபவம் போதாது .................

பொக்கிஷமாய் உன்னை கைக்குள் வைத்து காத்தவர்களுக்கு
உன் பொன்னான வாழ்க்கைக்கு
கணக்கு போட்டும் வைத்திருப்பார்கள் ..................

கைப்பேசியில் கரைந்து காதலில் மூழ்கி
வாழ்க்கையை துளைக்கும் வாடிக்கையை
நீயும் செய்யாதே ..............

உனக்கான காலமும் நேரமும் வரும்போது
வாழ்க்கையில் எல்லாவற்றையும் சாத்தியமாக்க
ஓர் உண்மை சமுதாயம் உனக்காக காத்திருக்கிறது ,
கேளடி கண்மணி ................

வாழ்க்கையில் எதையும் திருப்பலாம்
ஆனால் வாழ்க்கையை மீண்டும் திருப்புவது மிகக் கடினம் ..............

எழுதியவர் : விநாயகமுருகன் (28-Aug-20, 8:24 pm)
பார்வை : 191

மேலே