செல்ல மகள்

செல்ல மகளே சின்ன தேவதையே தவழ்ந்தோடி வா..
உன் புன்முறுவ சிரிப்பினிலே கவலை எல்லாம் பறந்தோடுமடி..

குற்றால சாரல் எல்லாம் உன் குரல் தேடுமடி...
உன் மழலை மொழி கேட்க இறைவனும் இங்கு வருவானடி...

குயில் பாட்டு தோற்குமடி உன் இசை கேட்டாலே....
என்ன தவம் செய்தேனோ மகளாக நீ வந்தாய்....

உலகால பிறந்ததனால் உனக்கு ஆதினி என பெயர் வைத்தேன்.....
ஒரு முத்தம் போதுமடி என் கவலை எல்லாம் நான் மறக்க.....

எழுதியவர் : (29-Aug-20, 10:29 am)
சேர்த்தது : Pothirajan
Tanglish : sella magal
பார்வை : 62

மேலே