வாக்கு மாறும் ஆட்சி
ஆட்சியும் மாறும்
காட்சியும் மாறும்.
அரச பீடமும் மாறும்.
எதிரும் புதிருமாக
இருந்தவர்கள்
இணைந்து நாடாளும்
காலங்களும் மாறும்.
ஏறி மிதித்தவனும்
மிதி பட்டவனும்.
கையோடு கை குலுக்கி
தோளோடு தோள் தழுவி
பாராளுமன்றம்
நுழையும்
காலமும் மாறும்.
கண்டிப்போம்
தண்டுப்போம்
என்று நாக்கு வலித்திட
வாக்குக் கொடுத்தோர்
எல்லோரும் வாக்கு வழுக்கி
சுயநலமாய் மாறும் காலமும் கூடும்.
மாற்றம் காணாமல்
ஏற்றம் இல்லாமல்
தோற்றுப் போய்
இருளோடு இருளாக
மறைவோடு மறைவாக
வறுமை என்னும் ஓடத்திலே
துயரம் என்ற கண்ணீரிலே
ஏழையின் வாழ்வு ஓடும்.