ஏமாளிகள் என்றும் நாம்

வருகவென
கூறவுமில்லை
வழியனுப்ப
முடியவில்லை !
கொரானா
கொடுமை
முற்றிலும்
தீரவில்லை !

ஆட்டிப்படைக்கும்
ஆட்கொல்லி
ஆணவத்துடன்
அலைகிறது !
அச்சத்தின்
அட்சரேகை
அனைவரின்
முகத்திலும் !

வலுவிழந்து
தவிக்கிறது
வாழ்வாதாரம்
வையகத்தில் !
உயிரில்லா
உடல்களாய்
உலவுகின்றனர்
உலகமக்கள் !

பொறுமையிலா
பொருளாதாரம்
வறுமைக்கோடு
வடிவமானது !
பணக்காரர்
ஏழையானார்
வறியவரோ
வாழ வழியின்றி
வீதிக்கு வந்தார் !

உள்ளவனுக்கு
பாதிப்பில்லை
இல்லாதவனுக்கு
வாழ்வில்லை !
பரப்பிய நாட்டில்
பரபரப்பு மாறவில்லை
இயல்பாக இயங்குகிறது
இயந்திரமாக சீனாவும் !

ஏமாளிகள்
என்றும் நாம் !
கோமாளிகள்
கோமாவில் !
மீண்டு வந்திட
மீட்புப் பணிகள்
மின்னலாய் நடந்து
சமுதாயம் வாழட்டும் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (28-Aug-20, 2:53 pm)
பார்வை : 497

மேலே