முடிவிலா இறைவன்
எது தூரம் எது தூரம் என்று
பதில் கேட்கும் மனமே அறிவாய்
உனக்கும் இறைவனுக்கும் இடையே நீயே
உண்டாக்கிக்கொண்ட இடைவெளியே வெகு தூரம்
என்று இதை உணர்கின்றாயோ அன்றே தூரம்
கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து முடிவில்
முடிவிலாதவனை உனக்கு காட்டும்