என்னுள் நீ உன்னுள் நான்

என்னுள் நீ உன்னுள் நான்
*****************************

என்னுள் நீயும் உன்னுள் நானும்
தொந்தரவின்றி
தொலைதூரப் பயணத்தில்
உறங்கிக் கொண்டிருக்கிறது
இருபோர்வைக்குள் ஓர் உறக்கம்
எண்ணி அசைப்போடுகிறேன்
நம் காதல் வாழ்க்கையை
கட்டாந்தரையில் கண்களை மூடி
உன் முதல் பார்வையில்
ஏதோ படபடப்பு
என்னவென நான் அறிந்திட
உன் பின்னே நடந்தேன்;  உனக்கு தெரியாமல்
அப்போது உனக்கு தெரியாது - நீ
எனக்குள் சங்கமமானது
நீண்ட நேரம் காத்திருந்தேன்
உன் வருகையை எண்ணி
வாசற்கதவின் ஓரம்
புன்முறுவலாய் உன் இதழ் புன்னகிக்க
ஞானிஒளிப் பரவியது
என் உடலில்
இரவுவரைப் பார்த்திருந்தேன்
உன் பூமுகத்தை
இமை விழிக்காமல் ரசித்திருந்தேன்
உன் தீந்தமிழை
வீட்டுக்கு வரவில்லை என
அலைபேசியில் அம்மா அழைக்க
கைக்கடிகாரத்தில் மணி பார்த்தேன்
இரவு எட்டு
எப்படியும் வீட்டுக்கு செல்ல
இரண்டுமணி நேரம் ஆகும்
பரபரப்பாய் நானும்
உன்னைத் தேட
இன்தமிழில் உன் நண்பருடன்
அலாவிக் கொண்டிருந்தாய்
கண்ணுக்குள் உன்னைப் புகைப்படம்
எடுத்து
மனதிற்குள் தினம் பேசிப்பழகினேன்
காதலை உன்னிடம் சொல்லாமல்
எத்தனித்து நின்றது - என் இதயம்
நெருங்கிப் பழகிட காத்திருந்தேன்
வாய்ப்பிற்கு
இருவரும் இணைந்திட அன்பின் ஆயுத்தம்
உன்னருகில் அமர்ந்தேன் உனக்கு தெரியாமல்
பேச மாட்டாயா?  பரிதவித்து நான் நின்றேன்
பக்கத்தில் இருப்பவரிடம் நீ பேச
நான் நொந்தேன்
காலங்கள் சென்றது
ஆனால் என் காதல் மட்டும்
தனிமையில் நின்றது
பொறுத்தது போதுமென
உன்னருகில் நான் வந்தேன்
உன் காந்தப் பார்வையினால்
சொற்கள் தடுமாறிட;
சொல்ல வந்ததைச் சொல்லாமல் நான் சென்றேன்
நாட்கள் செல்ல செல்ல
நினைவுகள் நெருடியது
பேருந்து நிலையத்தில்
என்னவன் நின்றிருக்க
அருகில் நான் சென்று
என் காதலைச் சொல்ல
அவன் விழிகளில்
கண்டேன் என்னை
பதில் ஏதும் கேட்காமல்
பேருந்தில் சென்றிட
பார்வை மட்டும் திரும்பியது
பாசத்துடன் வழியனுப்ப
கடற்கரையில் கதைக்கவில்லை;
சுற்றுலா சென்று சுற்றவில்லை;
எங்கும் செல்லவில்லை;
எதையும் பரிமாறவில்லை
ஆனால் எப்படியோ!
இடமாறியது
என்னுள் நீ.....
உன்னுள் நான்....


சரவிபி ரோசிசந்திரா

எழுதியவர் : சரவிபி ரோசிசந்திரா (29-Aug-20, 4:52 pm)
பார்வை : 399

மேலே