நினைவுக் குறிப்புகள்

நினைவுக் குறிப்புகள்
நான் : செந்தில் !
நீ : சார் !
நான் : வானவில் நிறங்களுக்கான
ஆங்கில Mneumonic VIBGYOR ஐ
'ஊகநீபமஆசி' என்ற
நினைவுக் குறிப்பாக மாற்றினேன்.
நீ ஏதாவது சொல்லேன்.
நீ. : 'காசிநீ' , ' அநீசி'.
நான் : எதற்கு இவை ?
நீ : காசிநீ=காரம்
சிவப்பு லிட்மஸ்தாளை நீலமாக்கும்.
அநீசி= அமிலம்
நீல லிட்மஸ்தாளை சிவப்பாக்கும்.
நான் : ஆகா !
அருமை! அருமை!
நிற்க! .......,.............................
எந்த ஊரிலும் எந்த வகுப்பிலும்
இந்த நினைவுக் குறிப்புகளைச்
சொல்ல மறந்ததேயில்லை நான்.
நீ சொன்ன நினைவுக் குறிப்புகள்
மனதிலே இருக்கின்றன மறையாது.
நீதான் மறைந்து போனாய்
யாரிடமும் யாதொன்றும் உரையாது.
என் செய்வது இனி!
-தீ.கோ.நாராயணசாமி
( ஈரேழு ஆண்டுகள் உடன் பயணித்து
20/06/20 அன்று தற்கொலை செய்துகொண்ட
ஆசிரியர்செந்தில்நாதனின்
இரங்கலும் இரங்கல் நிமித்தமும்.).

எழுதியவர் : தீ.கோ.நாராயணசாமி (31-Aug-20, 2:22 am)
சேர்த்தது : தீ கோ நாராயணசாமி
Tanglish : ninaivuk kurippukal
பார்வை : 391

மேலே