கொரோனா காலம்

இருள் சூழும் நேரம்
இந்த கொரோனா காலம்
பகலான போதும்
பகட்டென்றே தோன்றும்

காற்றில் பரவி
காலன் உருவோடு
கலங்க செய்கிறதே
வாழ வழி இல்லையே

இனி எந்த தொழில் செய்ய
எங்கள் பசியாற
அழுதும் தீராது
எங்கள் குறை போக

கால்வயிற்று கண்டோம்
முன்னாளில் நாம்
கனவாகி போனதடா
உணவும் இந்நாளில் நமக்கு

வேலை ஏதும்மில்லை
வயிற்றுக்கு சோறும்மில்லை
உயிர் பிழைக்க வழியுமில்லை
நடுத்தர வர்க்கம் நாங்கள்

படைத்தவன் பார்த்துக்கொள்வான்
என்று பலவாறு தேற்றினாலும்
பசி மட்டும் தவறாது
வந்துபோகும் விருந்தாளியாய்

ஒருவேளை கஞ்சியுண்டு
ஒருவேளை நீர் அருந்தி
ஒவவொரு நாளும் கடத்த
ஒருபக்கம் பயமுண்டு
கொரோனா ஆட்கொல்லி வருமென்று

மருத்துவம் படித்தவன் சொல்கின்றான்
நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால் வருமென்று...
இன்றும் பயம் கொண்டு கொரோன இன்றி
மறுநாள் எப்போது விடியுமென்று ...

எழுதியவர் : Rudhran (31-Aug-20, 3:43 am)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 67

மேலே