நற் சிந்தனைகள்

பார்வையில் பதுங்குவது அழகு
பக்தியில் ஈர்ப்பது அன்பு

கோஷத்தில் வருவது ஒலி
வேஷத்தில் வருவது போலி

உழைப்பில் வருவது பொக்கிஷம்
ஊற்றில் வருவது இலவசம்

தன்னில் வருவது தன்மானம்
தானாய் வருவது அவமானம்

உரிமையில் கொள்வது பாசம்
ஊக்கத்தில் காண்பது பொறுப்பு

சோதனையில் வருவது கலக்கம்
போதனையில் பெறுவது தெளிவு

செல்வத்தில் வருவது செருக்கு
கல்வியில் வருவது பண்பு

நோன்பில் காண்பது நற்சிந்தனை
நேசத்தில் காண்பது அன்பின் ஒளி

எழுதியவர் : பாத்திமாமலர் (1-Sep-20, 12:37 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : nar sinthanaikal
பார்வை : 305

மேலே