மௌனத்தில் நீசொல்வதெல்லாம்

மயிலுக்கு தோகை அழகு
மானுக்கு பார்வை அழகு
மௌனத்தில் காதல் அழகு
காதலில் நீ அழகு !

வானிற்கு நிலவு அழகு
வாசலுக்கு கோலம் அழகு
வசந்தத்தில் மலர் அழகு
வசந்த மலரினும் நீ அழகு !

கொடிக்கு பூ அழகு
பூவுக்கு தேன் அழகு
தேனுக்கு சுவை அழகு
தேனினும் உன்னிதழ் இனிது !

பனிசிந்தும் மலர் அழகு
மலர் சிந்தும் தேனினிது
உன்தேனிதழ்ப் புன்னகை அழகு
புன்னகை சிந்துவதோ வானமுது !

கவிதைக்கு மொழி அழகு
மொழிகளில் தமிழ் அழகு
மொழியா உனது மௌனத்தில்
நீசொல்வதெல்லாம் கவிதை தானடி !

எழுதியவர் : கவின் சாரலன் (2-Sep-20, 10:53 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 130

மேலே