கவிதாநதி தீரத்திலே 2 உமர் கய்யாம் Omar Khayyam

இன்று கவிதீரத்தில் உமர் கய்யாம் என்ற பாரசீகக் கவிஞரின்
ரூபயத் Rubaiyat கவிதைகளில் நான் ரசித்த ஒன்றிரண்டை
உங்களுடன் இங்கே பகிந்துகொள்கிறேன் .
கவிதை எழுதுபவர்கள் படிப்பவர்களில் உமர் கய்யாமை தெரியாதவர்கள் இருப்பது அரிது .அவர் 11 12 ஆம் நூற்றாண்டிற்கு
இடையே வாழ்ந்த பாரசீகக் கவிஞர் அதோடு அவர் கணித வானியல்
நிபுணர் தத்துவ ஞானி. மற்றவை நமக்குத் தேவை இல்லை .
உமர் கய்யாம் என்றதுமே A JUG OF WINE A BOOK OF VERSE என்ற
ஃ பிட்ஸ்ஜெரால்டு FitzGerald ன் வரிகள் நினைவுக்கு வரும்
பன்னிரண்டாம் நூற்றாண்டுக் கவிஞன் கய்யாமை உலகம்
முழுதும் அறியச் செய்த பெருமை பத்தொன்பதாம் நூற்றாண்டு
ஆங்கிலக் கவிஞன் Edward FitzGerald யே சாரும் .
அவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து Rubaiyat of Omar Khayyam
என்ற கவிதைத் தொகுப்பாக வெளியிட்டார் .
மேலே கவிதைக்குள் நுழைவோம் .

A Book of Verse underneath the Bough
A jug of Wine , a Loaf of Bread --and thou
Beside me singing in the Wilderness---
Oh, Wilderness were Paradise enow !

முதல் இரண்டு வரிகளும் ஓசையில் கடைசி வரியுடன் இயைந்து
ஒலிக்கும் . மூன்றாவது வரி தனித்து நிற்கும் . மூலக் கவிதையில்
கய்யாம் பின்பற்றிய ரூபயத் கவிதை அமைப்பை ஒட்டியே
ஆங்கிலத்திலும் FitzGerald வடிவமைத்தார் . அதனாலே இக்கவிதை
உலகெங்கிலும் புகழ் பெற்றது .இதே நியாயத்தை தமிழிலும்
செய்வது கடினம் .ஆயினும் இவ்வாறு வடிவமைக்கலாம் .

ஒரு கையில் கவிதைப் புத்தகம்
மறுகையில் மதுக்கிண்ணம் தட்டில் இனிய உணவு
அத்துடன் நீயும் இந்த நந்தவனத்தில் என்னருகில் இசை பாட
ஓ இந்த நந்தவனம் இப்போது என் சொர்க்கமடி !

கவிதா நதி தோழரே தோழியரே பிடித்ததா ?
மேலும் சில பார்ப்போம் !

எழுதியவர் : உமர்கய்யாம் by கவின்சாரலன் (1-Sep-20, 7:43 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 160

மேலே