பாராமுகம்
மனதிலிருந்து எழும் எண்ணங்கள்
விடுபடும் போது காற்றினும்
கடுகி செல்லுமாம் -பெண்ணே
உன்னைக் கண்டதுமே உன்னழகில்
மயங்கிய நான் உனக்கு
ஓர் காதல் மடல் மனதால்
எழுதி எண்ணமெனும் வில்லில் பூட்டி
உன்னிடம் சேர தொடுத்தேனே
இன்னுமா வந்து சேரவில்லை-இப்படி
இன்னும் நீ எனைக்கண்டு பாராமுகமாய்
இருக்கின்றாயே ஏன் ஏன் சொல்வாயா கிளியே