தீயோரும் நல்லோரும்

கருணை இல்லா இதயத்தில்
காருண்யம் இராது காதலும்
சுரப்பதில்லை இவ்விதயத்தாரே
'வில்லன்களாய்' உருவெடுத்து நாட்டில்
அராஜகங்கள் அத்தனையும் செய்து
கொஞ்சமும் சலனமில்லாது
சுதந்திரமாய் வளையவருகிறார்கள்
இவர்களை ஏன் இறைவன் என்பவர்
ஒருவர் இருந்தால் விட்டுவைகிறார் என்று
வினவினாள் அதற்கு ஒரே பதில்
இறைவன் 'சமத்தூக்கு'பார்வைகொண்டவன்
கருணாகரன் காருண்யன் அவன்
இத்தகையோருக்கும் இரக்கம் காட்டுபவன்
இந்த ஈனரும் திருந்தட்டும் என்று
திருந்தாபோய்யின் முடிவில்
இவர்கள் முடிவு அவன் கையில்
நம்முள் இறைவன் இருக்கின்றான்
அவன் நமக்கு சுதந்திரமாய் வாழ
வழியும் வகுத்துள்ளான்.... பாதைத்தவரி
வாழ்ந்திட நினைப்போர் 'தீயோர்'
வாழ்பவர் நல்லோர்

எழுதியவர் : வாழ்க்கை (3-Sep-20, 1:20 pm)
பார்வை : 63

மேலே