அடிபணிவான்

அன்புக்குள் அதிகாரம்
இருக்கலாம்—ஆனால்
அதிகாரத்திற்குள் அன்பு
இருக்க முடியாது

இதைச் செய்யாதே
என்பது அதிகாரம்
இதைச் செய்யாமல்
இருப்பது நல்லதென்பது அன்பு

இதைச் செய்
அல்லது செத்துவிடு
என்பது அகந்தை
அது அழிவைத் தரும்

அன்பின் வழிபட்ட
அதிகாரத்திற்கு
என்றும் மனிதன்
அடிபணிவான்

எழுதியவர் : கோ. கணபதி. (3-Sep-20, 3:36 pm)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 41

மேலே