உன் கண்ணொளியின் மின்னல் வெட்டில்

விண்வெளியில் பறந்து கொண்டிருந்த ராக்கெட்
உன் கண்ணொளியின் மின்னல் வெட்டில்
பாதை மாறி காணாமல் போய்விட்டதடி
நாசாவும் இஸ்ரோவும் தேடித் சோர்ந்துவிட்டது
செவ்வாய் ஆய்வு இடையில் நின்றுவிட்டது
கண்ணால் இன்னுமொரு மின்னல் வெட்டு வீசு
பாதை மாறிய ராக்கெட்டை பாதையில் கொண்டுவந்து சேர்த்து
மேலே போகவிடு !
அக்கினிச் சிறகுகள் அப்துல் கலாம் விருது
உனக்கு நிச்சயம் உண்டு !

எழுதியவர் : கவின் சாரலன் (3-Sep-20, 6:32 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 62

மேலே