காதல்

பொங்கிவரும் காமத்தில் நீயென்னை அணைத்திட அது
காமத்தீயாய் கோடை சூரியன் வெப்பமென
உணர்த்த நான் உன் அன்பின் அரவணைப்பில்
சித்திரை நிலவின் தன்னொளி என்னைத்
தொடுவது போல காண்கின்றேன்
காமம் காதல் தரும் பக்கவிளைவு என்பதை அறிந்தேன் நான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு� (3-Sep-20, 8:33 pm)
Tanglish : kaadhal
பார்வை : 189

மேலே