இயற்கை

யார் சொன்னார் அஃறிணைக்கு பாலில்லை என்று
வீசும் காற்றில் தென்றல் காற்று பெண்ணினமே
அது சோலையில் பூவினங்களைத் தடவி வந்து
என்னைத் தொடும்போது பெண்ணின் மென்மைகாண்கின்றேன்
தென்றலே நீயென்றும் என்னவள்போல் பெண்தான்
அதோ நீ போனபின்னே வந்து தாக்கும் காற்று
நீ என்னைத் தொட்டு சென்றதால் கோபம்போலும்
விளாசுகிறான் சாடுகிறான் உக்கிரமாகவே
நீ புயலோ சூறாவளியோ இல்லை வெறும் காற்றோ
காற்றே நீ ஆணே உந்தன் கோபத்தால் ஆத்திரத்தால்!
அஃறிணையில் பாகுபாடு .........

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (4-Sep-20, 9:56 am)
Tanglish : iyarkai
பார்வை : 243

மேலே