மாலே மருகா முருகா
மாலே மருகா முருகா
அறுசீர் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்
எந்தனுக் கருள்புரி தெய்வம்நீ
ஏழும மலையா னேயய்யா
கந்தா காத்தருள் செய்வாய்நீ
கடம்பா கதிற்கா மத்தேவா
விந்தை உலகமா இக்கலியும்
விரைந்தெமைக் காத்திடு முருகையா
சிந்தை கலங்கி தவிக்கிறேன்
சீக்கிரம் வந்தெனைக் காப்பாயே