அன்பும் அறனும் யாதெனின்

அது மதுரை அருகில் உள்ள ஒரு கிராமம்; அங்கு ஒரு பள்ளியில் நடக்கும் ஒரு விழாவிற்கு தான் நாம் போகிறோம்; வாங்க போகலாம்;
அறம் செய்ய விரும்பு ; ஆறுவது சினம்; என்ற அகிலா டீச்சரின் குரல் கணீரென்று கேட்டுக்கொண்டே இருக்கும். ஐந்தாம் வகுப்பு வரை அவர்கள் பாடம் நடத்துவார்கள்; இது வரை அவர்கள் நேரம் தவறி வந்ததில்லை; அவர்களின் அன்பான கண்டிப்புக்கு குழந்தைகளின் சந்தோசமான சிரிப்பு தான் பரிசு ; சிறு குழந்தைகள் என்றால் அவர்களுக்கு மிகவும் பிடிக்கும்; அந்த குழந்தையின் குறை நிறைகளை கண்டு அவர்களை நல்லபடி வளர்ப்பது மிகவும் பிடிக்கும்; இன்று அவர்களின் பணி நிறைவு நாள்; அந்த பள்ளியில் இன்றும் அவர்கள் வந்து விட்டார்கள் சரியான நேரத்திற்கு;
இன்று மாதத்தின் இரண்டாம் சனிக்கிழமை என்பதால் அவர்களின் பணி நிறைவு விழா வை கொண்டாடிவிடலாம் என்று ரெண்டு மாதத்திற்கு முன்னால் தலைமை பொறுப்பேற்ற அசோக் எனும் வாலிபன் முடிவு செய்திருந்தான்; அவனுக்கு வயதானவர்கள் பற்றிய அபிப்ராயம் வேறு மாதிரி இருந்தது; இவர்கள் அந்த கால பழசுகள்; சீக்கிரம் கழட்டி விட்டால் இனி வரப்போகும் உலகிற்கு புதிய ஆட்கள் சுறுசுறுப்பாக இயங்குவார்கள் என்று. இவனோடு ஜால்ரா தட்ட இன்றய தலைமுறை ஆசிரியர்கள்; அவர்களும் பத்து மணிக்கு தான் வந்தார்கள் . மணி என்று பியூன் யை அழைத்தார் அசோகன்;

மணி ," சொல்லுங்க சார்; ";
அசோக், " என்னப்பா எல்லோரும் வந்தாச்சா?"
(பியூன் மணி க்கு அகிலா டீச்சரிடம் நல்ல மரியாதை; அவன் குழந்தைகள் கூட அவர்களிடம் தான் படித்தார்கள்; )
மணி, " வந்துட்டிருக்கங்க சார் ; காபி, டீ,ஸ்னாக்ஸ் எத்தனை ஆர்டர் பண்றது சார்?"
அசோக், " பெருசா கூட்டம் எல்லாம் வராது ; எல்லோரும் டிவி பார்த்துட்டு லீவ் ல இருப்பாங்க; சும்மா ஒரு ஐம்பது சொல்லு போதும் ; சரி அந்த அம்மா பற்றி கொஞ்சம் சொல்லு; நான் ஸ்டேஜ்ல பேசணும் ல ":
மணி, " சார், அவர்களை பற்றி நிறைய சொல்லலாம் சார் ;"
அசோக், " என்னய்யா நிறைய, ? அந்த கால மனுஷி; பெருசா என்ன சாதிச்சிருப்பாங்க ; ஏதோ ரெண்டு சொல்லு நான் அதையே பேசிடறேன் ;"
மணி," சார் , குழந்தைகள் தான் நம் நாட்டின் அடுத்த தலை முறை அவர்களை நல்லபடி வளர்த்தால் போதும்னு ஐந்தாம் கிளாஸ் வரை மட்டும் தான் கிளாஸ் எடுத்தார்கள்; "
அசோக், " அதுக்கு மேல அந்தம்மாவுக்கு தெரியாதுய்யா "; ஜால்ரா எல்லாம் சிரித்தார்கள் ;
மணி," இல்ல சார், அவங்க கம்ப்யூட்டர் ல பெரிய படிப்பெல்லாம் பாஸ் பண்ணி ரொம்ப நாள் ஆகுது சார்; ";
அசோக், " அப்படியா ? அப்புறம் ..";
மணி," நிறைய குழந்தைகளுக்கு சாப்பாடு செய்து தினமும் கொடுப்பாங்க சார்; "
பழைய ஸ்டுடென்ட்ஸ் க்கு இப்போவும் காலேஜ் பீஸ் எல்லாம் கட்றாங்க சார்; அவங்க பையன் நல்ல உத்தியோகத்துல இருக்கார் சார்; இருந்தும் அவங்க இங்க தான் இருப்பேன்னு இருந்துட்டாங்க சார் ";
அசோக், " சரியா ; போதும்; போதும்; இதைவைத்து என் பேச்சை முடிச்சுகிறேன்" ;
மத்தவங்கள நம்ம ஆடிட்டோரியும் ல உட்கார வை; ரொம்ப செலவு பண்ணாத; " விட்டேத்தியாக சொன்னான்;
மணி " சரி, சார் " இப்போதெல்லாம் நல்லவர்களுக்கு காலம் இல்லை என்று முனுமுனுத்தே நகர்ந்தான் ;
அகிலா ஸ்கூல் முழுவதும் சுற்றி வந்தார்; அவரது கிளாஸ் குழந்தைகள் அவளை நோக்கி ஆவலாக ஓடி வந்தார்கள்; மிஸ் மிஸ் என்று அவர்களின் குரல் அவளுக்குள் பாசத்தை எழுப்பியது; அதன் விளைவு அவளின் கண்ணீராய் கணத்தில் உருண்டது;
அகிலா அவருக்குள் உரையாடினார் ....
முப்பத்தைந்து ஆண்டுகள் முடிந்தது; ஒரு ஆசிரியராய் என் பணியை நான் நல்லபடி செய்தேனா ? என்று நான் யாரிடம் கேட்க முடியும் ? " என் ஆசிரியர்கள் சொன்னதை இல்லை அவர்கள் வாழ்ந்து காட்டியதை நான் வாழ்ந்தேன்; எத்தனையோ வேலைகள் கிடைத்த போதும் "ஆசிரிய பணி ஒரு அறப்பணி அதற்கு நீ உன்னை அர்ப்பணி " என்ற வார்த்தை என் வாழ்க்கையை வழி நடத்தியது;
அன்று என் தந்தை சொன்னார் : "அகிலா , ஆசிரியர் பணி சாதாரணம் இல்லை; அதுவும் ஒரு வகையில் இராணுவப் பணி போல; எப்படி இராணுவத்தினர் நம் எல்லையில் இருந்து தவறு நடக்காமல் நாட்டை பாதுகாக்கிறார்களோ அது போல நீயும் இளம் குழந்தைகள் மனதில் நல்ல சிந்தனைகளை விதைத்தால் நாட்டுக்குள் தவறு நடக்காது காக்க முடியும் "; அப்பா உங்க வார்த்தையை நான் காப்பாற்றி இருக்கேன் அப்பா; "
மேடம் என்ற அழைப்பில் கண் விழித்தாள்; சந்தோசமான சிரிப்புடன் அங்கு ரகுராம் நின்று கொண்டிருந்தான் ; இல்லை நின்று கொண்டிருந்தார்; நாற்பது வயது முடிந்து விட்டது;
அகிலா," நீ, நீங்க ரகு தானே; "
ரகு,"மிஸ், உங்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நாங்க எல்லோரும் வந்திருக்கோம்; அன்னைக்கு நீங்க பீஸ் கட்டி படிக்க வைத்ததால் தான் நான் இப்போ மேனேஜர் ;"
அகிலா," அப்படி எல்லாம் பேசாதே ; நீங்க உங்க கடமைகளை செய்தீங்க; நான் சின்ன உதவி செய்தேன் அவுளோதான்; உனக்கு எப்படி தெரியும் ? மீட்டிங் இருக்குன்னு ?";
ரகு, " வாட்ஸ் ஆப் ல எங்க குரூப் ல போட்டு எல்லோரும் வந்திட்டோம் என்றான் சந்தோஷமுடன் ";
அகிலா," அப்படியா ? ", குழந்தைகள் வளர்ந்தாலும் பெற்றோருக்கும், ஆசிரியருக்கும் அவர்கள் குழந்தைகளே; அவர்களை பார்க்கும் போது மனதுக்கு தான் எத்தனை ஆனந்தம் ?";
மிஸ், மிஸ் என்று எல்லோரும் வனஜா, கிரிஜா, ராகவன், பொன்வண்ணன் ……….பள்ளிக்குள் நுழைந்து கொண்டிருந்தார்கள்;
கூட்டம் போடும் சப்தம் கேட்டு மணியும் ஓடி வந்தான்; வாய் பிளந்தான்;
ஒரு கான்டீன் வேன் வந்தது ; சார், நாங்க கிருஷ்ண பவன் ; function க்கு ஆர்டர் கொடுத்தாங்க எங்க வைக்கணும் ? " ;
மணி,"நாங்க ஆர்டர் கொடுக்க ல "; அசோக் வேகமாக வெளியில் வந்து பார்த்தான் ; என்னய்யா என்று மணி இடம் ஜாடை கட்டி கேட்டான்;
வேன் டிரைவர்,"சார், எங்க முதலாளி இந்த ஸ்கூல் ல தான் படித்தவர்; பின்னால் வருகிறார்; "
இங்க வைத்து சர்விஸ் பண்ண சொன்னார்; "
அசோக், புதிய திருப்பத்தை கண்டு அசந்து போனான்; மற்ற திசைகளை பார்த்தான்; கூட்டம் கண்டு மிரண்டு போனான்; ஐம்பதில் அவன் முடித்த கணக்கு ஆயிரமாக மாறுவதை கண்டு மிரண்டு போனான் ;
"சார், நான் அகிலா மிஸ் உடைய சன் ; என் பெயர் மித்ரன்; ஐ அம் சி.இ. ஓ ஆப் ஜான்சன் கம்பனி பெங்களூர்; அம்மா உங்களை பற்றி நிறைய சொல்லிருக்கங்க; யங் அண்ட் எனர்ஜி டிக் பெர்சன் ;கிளாட் டு மீட் யூ சார் "; - மித்ரன்;
அசோக், " thank யூ சார் "; என்ற அசோகன் முதன் முதலாக அகல்யா மேடம் மீது மரியாதையுடன் பார்த்தான் ; மரியாதை என்பது ஒருவரின் உயர்ந்த குணங்களால் கிடைப்பது என்பதை புரிந்து சிரித்ததை மணி கண்டு ரசித்தான்;
அரங்கம் நிறைந்தது; யார் சிறப்பு விருந்தினர் ? என்ற கேள்விக்கு விடையாக ஒரு மந்திரி, ஒரு கம்பெனியின் எம் . டி . , ஒரு பத்திரிகையின் சீப் எடிட்டர் மற்றும் IAS அண்ட் IPS என்று எல்லோரும் வந்திருந்தார்கள்;
தலைமை ஆசிரியர் அசோகன் விழாவை துவக்கி வைத்தார்;

அவரது உரையை சின்னதாக முடித்தார்; IPS, நான் செய்த சில தவறுகளை மேடம் மன்னித்து என்னை வழி நடத்தியதால் தான் நான் இன்று நல்ல ஒரு குடிமகனாக சேவை செய்கிறேன் என்றார்; எல்லோரும் அவரவரின் நினைவுகளை,சந்தோசங்களை பகிர்ந்து கொண்டார்கள்;
மணி கூட " மிஸ் யை விட்டு பிரிய மனம் இன்றி தான் நான் இங்கேயே வேலை யில் இருக்கிறேன் என்று கரகோஷத்தை அள்ளிக் கொண்டான் ;
அகிலா மேடம் பேச தொடங்கினார்கள்; அரங்கம் அமைதியாய் கவனித்தது;
“என் இனிய குழந்தைகளே ....
ஆசிரியர் பணி என்பது ஒரு வேலை மட்டுமே அல்ல; அது வாழ்க்கை; நாம் சொல்லிக்கொடுக்கும் பாடங்களை வாழ்ந்து காட்டும் பணி; இந்த சமுதாயத்தின் அடுத்த தலைமுறைகளை சிறப்பானதாக உருவாக்க வேண்டிய பணி; எல்லோரும் இந்த பணியில் இருந்து வெற்றி காண இயலாது; நல்ல சிந்தனை நல்ல செய்லகளை உருவாக்கும்; நல்ல செயல்கள் நல்ல விளைவுகளை உருவாக்கும்; நாம் நல்ல சிந்தனைகளை உருவாக்க வேண்டிய ஆசிரியர்கள்;
ஒரு நாட்டை படைகளால் மட்டும் காப்பாற்ற இயலாது;
நல்ல ஆசிரியர்கள் நல்ல மாணவர்களை உருவாக்கலாம்; நல்ல மாணவர்கள் குறைகளும் குற்றங்களும் இல்லாத நாட்டை உருவாக்குகிறார்கள்; எனது இந்த நம்பிக்கைக்கும், என் வாழ்க்கையின் வெற்றிக்கும் இங்கு வந்துள்ள என் மாணவர்களே நல்ல சாட்சி;
நாட்டை ஆளும் பெரியவர்களுக்கு என் மனமார்ந்த வேண்டுகோள்; ஆசிரியர்களையும் கல்வித்துறையையும் நாட்டின் கைகளில் மட்டுமே வைத்திருந்தால் தான் நல்ல சமுதாயத்தை உருவாக்கும் ஆசிரியர்கள் இந்த பணியில் நிலைத்திருப்பார்கள்; எந்த நாட்டில் ஆசிரியர்கள் வறுமையில் துன்பப்படுகிறார்களோ அந்த நாட்டில் வறுமை மறையாது; இது சான்றோர் வாக்கு ;
ஐயா , அப்துல் காலம் அவர்கள் சொன்னது போல நம் நாடு வலிமையுடையதாய் மாற இன்றைய தேவை நல்ல அன்பும் அருளும் உடைய ஆசிரியர்கள்; அவர்களின் கைகளில் நம் நாடு மேலும் வளரவேண்டும் என்று கூறி.. என்னை சிறப்பிக்க வந்த என் மாணவச்செல்வங்களுக்கு நன்றி; என முடித்தார்; தனது தாயை பெருமையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் மித்ரன்;
முடிவுரையில் " அகிலா மேடம் தனது மேலாண்மை திறமையை கெஸ்ட் faculty யாக வந்து மற்ற ஆசிரியருக்கு பயிற்சி கொடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் என்று முடித்தார் தலைமை ஆசிரியர் அசோகன் ;
மணி சப்தமாக கை தட்டினான் ; அரங்கம் நிறைந்தது கரகோஷத்தால்;
ஆம்;
ஆசிரியர்கள்
அக்காலம் , இக்காலம் ;எக்காலம் என்று
முக்காலமும் வென்றவர்கள்; ஆதலால்
எல்லோர் மனத்திலும் நிற்பவர்கள்;

என்ன? வாசக நண்பர்களே , கலந்து கொண்ட இந்த விழா சிறப்பானதாக இருந்ததா ? என்னுடன் கலந்து கொண்டதற்கு நன்றி ; நம் தாயும் தந்தையும் போல நம் மனதில் மறக்க இயலா இடம் பெற்றவர்கள் ஆசிரியர்கள்;
அவர்களை வாழ்த்தி வணங்குவோம் ;

எழுதியவர் : சம்யுக்தா ( நரேனி தாசன் ) (5-Sep-20, 3:49 pm)
சேர்த்தது : Samyuktha
பார்வை : 1017

சிறந்த கட்டுரைகள்

மேலே