உறுப்புகளின் முரண்

--------------
கண்ணுக்கு புலப்படாத நுண்ணுயிரி
காட்டுவதோ கண்ணுக்குள் மரண பயம்..
என் கை மீதே எனக்கு சந்தேகம்
என் சாவிற்கு துணை நிற்குமோவென்று...
கண்ணில் தூசி விழுந்தது தவிக்கையிலும்
கைக்கேனோ கண்ணீர் துடைக்க துணிவில்லை..
கோடை வெயில் தந்த நெற்றி வியர்வை
தோள்பட்டை துணி துடைக்கிறதென் விரல் மறுக்க...
இருபது நொடிகள் இரு கைகள் கழுவியும்
இலை சோறு முன்னமர்ந்தும் ஏனோ சந்தேகம்...
நாள் தெரிந்த நாள் முதலாய் நகம் கடிக்குமென்
பழக்கம் நான் மறந்து கோணலாயென் நகங்கள் ...
தூசி பறந்து யாருக்கும் தும்மல் வந்திடினும்
துவண்டு போகிறதென் மனதென்னவோ ..
என் குழந்தைக்கு சலிப்பின்றி சளி துடைத்த
என் கைகளென் நாசி தொட தயங்குவதேனோ...
என்னுறுப்புகளுக்குள் இந்த முரண்பாடு
இன்னும் எத்தனை நாள் என் இறைவா...
மனம் உருகி வேண்டுகிறோம்
மனம் திறந்து எம்மக்களை நீ காப்பாற்று..
------------------------------
சாம்.சரவணன்

எழுதியவர் : சாம்.சரவணன் (5-Sep-20, 6:56 pm)
சேர்த்தது : Sam Saravanan
பார்வை : 42

சிறந்த கவிதைகள்

மேலே