சீனாவின் பிடியில் இந்திய இளைஞ்சர்கள்
சீனாவின் பிடியில் இந்திய இளைஞ்சர்கள்
நேரிசை வெண்பாக்கள்
வியர்வைசிந்தி ஈட்டிய கூலியை பெற்றோர்
துயர்நினைக்கா பிள்ளைகளுக் கீய -- தயக்கமின்றி
இந்தியப்பிள் ளைசீனச் சூதாட்டம் வீடியோகேம்
சிந்திக்கா தாடியொழித் தார்
பதினேழு பில்லியன் டாலராம் சீனச்
சதிகார ரின்நித்தக் கொள்ளை -- அதிசயச்
சூதை அறியார் உலகோர் தெரிந்தின்று
பாதை தடுத்தா ரறிந்து
பிள்ளைகள் பெற்றோர் கிரெடிட் திருடிப்பின்
கொள்ளையன் சீனத்துக்குத் தந்தாராம் -- தள்ளி
ஒருநாளைக் குப்பதினேழ் பில்லியன் டாலர்
வருமான மாம்சீனத் துக்கு.
முப்பத்தாறு போர்செய் ரபேல்வாங்க பில்லியனும்
தப்பாது பத்துபோதும் ஆயினும் --- பப்ஜி
விளையாட்டில் பில்லி யனில்பதி னேழாம்
சுளையாய் தினம்சீனா வுககு
இந்தியா முப்பத்தாறு ரபேல் போர்விமானங்களை பத்து பில்லியன் அமெரிக்க
டாலர்களைக் கொடுத்து வாங்கியுள்ளது. இது அனைவருக்கும் தெரியும்
அனைவருக்கும் தெரியாதது சீன அறிமுகப் படுத்தியுள்ள பப்ஜி எனும் வீடியோ
விளையாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதில் விளையாட வீடியோ துப்பாக்கி ரவைத் தோட்டாக்கள் இன்னும் சில
ஆய்தங்களை வீடியோவில் பணம் கட்டினால் தான் விளையாட முடியும்.
இதற்காக இந்தியக் குழந்தைகள் பெற்றொரின் கிரெடிட் கார்டில் பணத்தைத் திருடி
சீனாவின் அக்கவுண்ட் டிற்கு ஒரு நாளைக்கு எவ்வளவு பணம் அனுப்புகிறார்கள்
தெரியுமா?தோராயமாக ஒருநாளைக்கு பதினேழு பில்லியன் அமெரிக்கா டாலர்களை
அனுப்புகிறார்களாம். இந்த பணத்தக்கொண்டு இந்தியா ஒருநாளைக்கு நூறு ரபேல்
விமானங்கள் வாங்கா லாமாம். ஒரு மாதத்திறகுப் எவ்வளவு விமானங்கள் வாங்கலாம் ?
இந்த விளையாட்டிற்கு அப்பா பணம் தரவில்லை என்று பங்களூரில் ஒரு பையன்
அப்பாவின் தலையையே வெட்டி சாகடித்துள்ளான். தற்போது பாரதப் பிரதமர் மோடி
அவர்கள்கண்டுபிடித்து இந்தியாவில் இதை யாரும் விளையாட கூடாது என்று தடை
விதித்து பணம் சீனாவுக்குப் போவதையும் தடுத்துள்ளார்.
நான்கு வருடங்களுக்கு முன் ரஷ்யா புளு வேல்ஸ் என்ற தற்கொலை செய்து
கொள்ளும் விளையாட்டை உலகத்தில் பரவவிட்டார்கள். இப்போது பல நாட்டையும்
சீனா பப்ஜி விளையாட்டால் ஒட்டாண்டியாக்க திட்டமிட்டு செய்து வருகிறது.
இதுபற்றி உங்கள் பிள்ளைக கண்காணியுங்கள் விழிப்பாயிருங்கள்.