காலத்தின் சிற்பி
ஆசிரியர்களின் சிறப்பியல்கள் சொல்ல ஓர் ஜென்மம் போதாத போதிலும்....
என் கவிதையின் மூலம்
பல வரிகள் சொல்ல விரும்புகிறேன்!
விதையாக இருந்த நம்மை மரமாக்கி
மற்றவருக்கு நிழலாக மாற்றி !
மூடிக்கிடந்த நம் மனதை....
லட்சியம் எனும் சுடர் ஒளியை ஏற்றி !
நம்மை அறிஞராக, கவிஞராக, மருத்துவராக, காவலராக!
தன் தாய்நாட்டை பாதுகாக்கும்
ராணுவ வீரனாக !
நம்மை உருவாக்கும் நல்வழிகாட்டிகள்.....
காலத்தின் மருவுருவம் நம் ஆசிரியர்கள்.....
ஆசிரியர்களை மதித்து !
மனத்திரையில் பதித்து !
துயரத்தில் இருக்கும் போது
தன்னம்பிக்கையின் வடிவமான ஆசிரியரை நினைத்து.....
ஆண்டுகள் பல கடந்தாலும் !
அழியா புகழை நாம் அடைந்தாலும்...
ஆசிரியர்களின் நினைவு...
நீங்கமற இடம் பிடிக்கும் என்றும் நம் மனதில்....
நம் உயிர் நாடி இருக்கும் வரை !