நான் தேடும் ஆசிரியன்
கற்ற விதையை, ஞானத்தை காசாக்க
பார்ப்பவன் ஒருபோதும் நல்லாசான் ஆவதில்லை
புறக்கண் எல்லோருக்கும் உண்டு ஆயின்
ஞானக்கண் தந்து ஒருவனை சிந்திக்க வைப்பவன்
நான்தேடும் ஞானகுரு, ஆசிரியன் அவன்
வறுமையே வாட்டினாலும் தன ஞானத்தை
விற்க துணியமாட்டான் உயிரே போயினும்
இன்று நாம் காணும் இந்த அவசர
வியாபார உலகில் இத்தகைய ஆசான்
உள்ளாரா.... உள்ளார் எனில் அவரை
கரம் கூப்பி வணங்குவேன் நானே