சந்திராயன் நினைவு தினம்

சந்திராயா...அன்று எழுதியது
______________________________
நாற்பத்தைந்து நாள்
நடு வானில் பயணித்து
சந்திரனை கண்டவுடன்
சமிக்ஞை தர ஏன் மறந்தாய்?

சந்திரன் மீது காதல் கொண்டு
இந்தியனை மறந்தாயோ?

நீயென் சகோதரனும் இல்லை
சந்ததியும் இல்லை
சங்கடம் மட்டும் ஏன் தந்தாய்?

யாரும் பாரா டி டியை
உன் முதல் தடம் காண
தேடி பிடித்தேனடா..

பாகிஸ்தான்காரன்
பாயாசம் சாப்பிடுவான்...
சீனாகாரன் சீனி அள்ளி தின்னுவான்..
அமெரிக்காகாரன் அல்வா சாப்பிடுவான் என்றுனக்கு தெரியாதா?

சிவன் கைப்பட்டு
நீர் தேடி போன நீ
அங்கு நீரின்றி செத்து போனாயோ?

இ ஸ் ரோ வளாகம்
இழவு வீடாகுமென
உனக்கு தெரியாதா?

ஆளில்லா கோளில்
கேட்பாரற்று கிடப்பாயடா...

உன் தம்பி வரும் வரை
உன்னினைவுகள் இங்கு
உலாவுமடா..

எழுதியவர் : சாம்.சரவணன் (7-Sep-20, 8:12 am)
சேர்த்தது : Sam Saravanan
பார்வை : 588

மேலே