அன்புள்ள அப்பாவே

*அன்புள்ள* *அப்பாவே*

அன்புள்ள அப்பாவே
எங்குப் போனீங்க
நள்ளிரவு வந்திடுச்சு
எப்பதான் வருவீங்க

காத்திருக்கேன் ரொம்ப நேரம்
கதவோரம் அப்பா நானும்
அப்படியே இருக்கு நீங்க
வாங்கியப் பாலும் தேனும்
எப்ப வந்து ஊட்டுவீங்க அப்பா
வயிறு நிறையாம  சுருங்கிப் போனதப்பா
கண்ணும் தான் தூங்காமல் விழிச்சிருக்கு வாருங்க அப்பா
வெண்மேகம் கண்ணீர் மழை
பொழியுதுப்  பாருங்க அப்பா

கைவிரல் பிடிச்சு நீங்க
நடக்க கற்றுக் கொடுத்தீங்க
தலைக்கு ஊத்தும் போது
கண்ணு ரெண்டும் பொத்துவீங்க
உடம்பு முடியலைனா இரவு
முழுதும் உறங்காமல் விழிப்பீங்க
கடன் வாங்கி வந்தாலும்
புதுச்சட்டை வாங்கித் தருவீங்க
அம்பாரித் தூக்கிக்கிட்டு
ஆனையாய் அசைவீங்க
ஆசையாய் என்னை அணைத்து
அன்பு முத்தம் கொடுப்பீங்க

உன் சட்டையில தூங்கினா
கருவறை வாசம் வீசும்
வேட்டியைப் போர்த்தித் தலைசாய்ந்தா வியர்வை வந்து பேசும்

இனிமேல் எனக்கு யார் அப்பா
நீரில்லா மீனாய் துடிக்கிறேன் அப்பா

அப்பா நீங்க சிரிச்சா
அந்தக் கற்பாறையில் பூப்பூக்கும்
கோபத்தில முறைச்சா
விண்ணில்  சூரியனும் சிவக்கும்
கொஞ்சிப் பேசின
கொடுந்தீயும் அணையும்

*சரவிபி* *ரோசிசந்திரா*

எழுதியவர் : சரவிபி ரோசிசந்திரா (7-Sep-20, 7:50 pm)
பார்வை : 2612

மேலே