கவிதாநதி தீரத்திலே 3 உமர் கய்யாம் Omar Khayyam 2

முந்தய கவிதாநதி தீரத்திலே உமர் கய்யாமின் பிரபலாமான
ஒரு கவிதையைப் பார்த்தோம். நான் ரசித்த இன்னுமொரு
அழகிய கவிதையைப் பார்ப்போம் .

Myself when young did eagerly frequent
Doctor and Saint and heard great argument
About it and about ; but evermore
Came out by the same door where in I went !

நான் என் இளமை நாட்களில் ஆர்வத்துடன் அடிக்கடி
நாடிச் சென்றேன் சான்றோர்களையும் ஞானிகளையும்
பெரும் விவாதங்களைக் கேட்டேன் இது பற்றியும் அது பற்றியும்
மேலும் மேலும் கேட்க கேட்க
எந்த வாசல் வாசல்வழி நுழைந்தேனோ அந்த வாசல் வழியே திரும்பி வந்தேன் .

இதில் Came out by the same door where in I went ! என்ற கடைசிவரியே PUNCH LINE !
தத்துவார்த்தமான விஷயங்களை புரிந்து கொள்ள அறிஞர்களையும் ஞானிகளையும்
நாடிச் செல்லும்போது நம்மில் பலருக்கும் இந்த அனுபவமே ஏற்பட்டிருக்கும் .
இப்படித்தான் இளவரசன் சித்தார்த்தன் அழகிய மனைவியையும்
மகனையும் அரண்மனை வாழ்வையும் அரச போகங்களையும்
விட்டுவிட்டு உண்மை அறிய நாடு நாடாய் ஊர் ஊராய்
பெரியோர்களையும் அறிஞர்களையும் ஞானிகளையும்
நாடிச் சென்றான் . சமாதானம் கிடைக்கவில்லை .
எந்த வாசல் வழி நுழைந்தானோ அந்த வாசல் வழியே திரும்பி
வந்தான்.
கடைசியில் சித்தார்த்தன் ஒரு போதி மரத்தடியில் அமர்ந்தான்
ஞானம் பெற்றான் புத்தனான் .
நாமும் இப்படி ஒரு WISDOM TREE யைத் தேடவேண்டும் .
கூகிளில் தேடினால் கிடைக்குமா ?

எழுதியவர் : கவின் சாரலன் (7-Sep-20, 9:36 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 49

மேலே