கூகிள் , அவன், அவன் தாய்
என்னடா அப்படி உந்தன் 'கூகிளில்' தேடுகிறாய்
என்னையும் மறந்து விழித்திருக்கும் ஒவ்வோர் நொடியும்
என்று பையனை அவன் அம்மா கேட்க அவன் சொன்னான்
இதில் தேடினால் கிடைக்காததும் உண்டா சொல்லம்மா
நீயே எனக்கு தேடுகின்றாயே மணம்முடிக்க பெண்
அவளும் இதை தேட கிடைப்பாள் வேண்டாமென்றால்
காதலியும் கூட கிடைப்பாள் அம்மா என்றான் அவன்
அதற்கு அம்மா அவனிடம் கேட்டால்' சரிடா நீ சொல்வது
ஒன்னு சொல்லு எனக்கு நீ தேடும் கூகுளில்
ஒரு தாய் கிடைப்பாளா அவள் பாசமும்தான் என்க
அதைக்கேட்டு வாயடைத்துப்போனான் அவன்
'லெப்-டாப்' மூடிவைத்து அம்மா நீதான் என்னுலகம்
என்று கட்டிக்கொண்டான் அனந்த கண்ணீர் விட்டான்