நினைவுகளின் காதல்
தூக்கத்தில் சிரிக்கிறேனாம், ஏதோ வெற்றுக் கனவென்றார், என் தேவதையின் ஓரப் புன்னகைக்கு நான் கூறும் பதிலென்று அறியாமல்...!
வானத்தை அளக்கிறேனாம், ஏதோ வெற்றுக் கற்பனையென்றார், நிலவும் சூரியனும் சுற்றித் திரியும் இடத்திலே, உன் முகம் மட்டும் காண்பதை அறியாமல்,
தனியே வெட்கப் படுகிறேனாம், ஏதோ வெற்றுப் பூரிப்பென்றார், உன் அருகிலே நான் பேச வார்த்தைகள் வராமல் தத்தளிப்பது அறியாமல்,
நானாக நான் இல்லை, ஏதோ வெற்றுப் பைத்தியமென்றார், என் அனைத்திலும் உன் நினைவுடனே காதலிப்பது அறியாமல்...!