உன் பூவிதழ் அருகே
உன் அழகை வர்ணித்து
நான் எழுத தொடங்கிய கவிதையை
முடிக்கத் தெரியாமல்
முழித்துக் கொண்டிருக்கிறேன்
பெண்ணே!
உன் பூவிதழ் அருகே
புதைந்து கிடக்கும் மச்சத்தினை
நகல் ஒன்று எடுத்துத் தந்தால்
வரிகளுக்கு அழகாய்
முற்றுப்புள்ளி வைத்து
கவிதையை முடித்துக் கொள்வேன்.
❤️சேக் உதுமான்