மழை
மழையே
நீர்த்துளியாய் வந்து
பூமியில் விழுகிறாய்!
நீ
பூமியை மட்டுமா நனைக்கிறாய்!
எங்கள்
மனதையும் சேர்த்தல்லவா
நனைய செய்கிறாய்!
உன்னை
கணடாலே உள்ளத்தில்
துள்ளல் அல்லவா!
நாங்கள்
பெரியவரானாலும் அந்த நொடியில்
சிறுபிள்ளையாய்!
மழையே
இந்த வித்தையை
யாரிடம் தான்
கற்றாய்!
உன்னை
போல நானும் பயன்தர
விரும்புகிறேன்
கற்று தருவாயா....
******நர்மதாதுரைராஜ் ******

