மேரிகோம்களும் கல்பனா சாவ்லாக்களும்

ஒல்லியான உடல்வாகுடன்
உதட்டு சாயமின்றி
நீள்வட்ட வடிவ முகத்தில்
மூக்குக் கண்ணாடி அணிந்து
ஆடவர்களை கண்டு
அனிச்சையாக மாராப்பு சரி செய்து
பத்து மணி தாண்டினால் பாதி சம்பளமே
என்பதல்லா பருவ கனவு வேறின்றி
மாநகர பேருந்தில் பயணிக்கும்
பெண்டீர்களை இனி நீங்கள் கண்டால்
இக்கூற்றை மறுநினைவு கொள்ளுங்கள்
அவர்கள் இந்நாட்டு இளவரசிகள்

எழுதியவர் : பெருமாள்வினோத் (10-Sep-20, 9:27 am)
சேர்த்தது : பெருமாள் வினோத்
பார்வை : 20

மேலே