என் மகள்

மாட மாளிகையை புதுப்பியுங்கள்
தவழ்ந்து விளையாடும் தரையில்
வைர வைடூரியங்களை பதியுங்கள்
பல்லாங்குழியில் முத்துக்களை நிரப்புங்கள்
தென்றல் நீங்கலாக மற்றவைகளுக்கு
தடுப்பு சுவர் எழுப்புங்கள்
நித்தம் ஒரு புலவரை அழையுங்கள்
நிலவிற்கு மூடு விழா நடத்துங்கள்
சூரியனுக்கு திரைச்சீலை இடுங்கள்
ஆம்பல்களால் அரியாசனம் செய்யுங்கள்
இதோ அவதரித்து விட்டாள்
எங்கள் நாட்டு இளவரசி

எழுதியவர் : பெருமாள்வினோத் (10-Sep-20, 9:25 am)
சேர்த்தது : பெருமாள் வினோத்
Tanglish : en magal
பார்வை : 104

மேலே