நான்

சிறுக சிறுக சேமித்த மலர்களை
ஓடும் கால்வாயில் பொத்தென்று
போட்டு விடுவேன்
வண்ணத்துப்பூச்சிகளின் சிறகுகளை பறித்து வலிக்கிறதா
என்று கண்ணீர் சிந்துவேன்
தர்மம் கேட்பவனை விரட்டி விட்டு
பசியை பற்றி கவிதை எழுதுவேன்
நீங்கள் விரும்பாத போது பேசி தீர்ப்பேன்
விரும்பி கேட்டால் மெளனம் காப்பேன்
உணர்ச்சி குவியலாய் ஆகுவேன்
உள்ளீடற்ற ஒருவனாகவும் மாறுவேன்
என்னோடு பயணப்படுவது
அத்துணை எளிதொன்றும் அல்ல

எழுதியவர் : பெருமாள்வினோத் (10-Sep-20, 9:24 am)
சேர்த்தது : பெருமாள் வினோத்
Tanglish : naan
பார்வை : 289

மேலே