மாறாத காதல்
உழைக்க உழைக்கத்தான்
நம் வாழ்க்கை இனிக்கிறது
பல்லாண்டு பல்லாண்டு
உயிர்வாழ ஆசை பெறுகிறது..!!
அதுபோல்தான்..!!
கவிதை எழுத எழுதத்தான்
தமிழின் மீது மோகம் ஏற்பட்டு
காதல் பெருக்கு ஏற்படுகிறது
சிலரது மனித காதல்
ஆசை அறுபது நாள்
மோகம் முப்பது நாள் என்று
மாறும் தன்மையுடன் இருக்கலாம்
ஆனால்...!!
தமிழ் மீது நான் கொண்ட காதல்
மண்ணுக்குள் சென்றாலும் மாறாது
கல்லறையிலும் தமிழ் கவிபாடும்..!!!
--கோவை சுபா