பாரதி

எழில் கொஞ்சும் ஏழிலில்
ஏடறியும் அவன் ஞானத்தை !
பார் போற்றும் பாரதி
பதினொரு வயது கண்டவன் !
முட்டாள் வகுப்பான் சாதி என்று
முரசடித்து முழக்கமிட்டான்
முண்டாசு கவி !
கற்ற மொழிகளில் இனிமையை
பைந்தமிழில் கண்டான் !
கவியின் காதலன்
கண்டதெல்லாம் காதலித்தான் !
பெண்மையைப் போற்றும்
மேன்மை யுள்ளம் கொண்டவன் !
நோபலை நோக்கிய அவன்
கனவு மெய்ப்பட வில்லை.
நாற்பதை எட்டவில்லை
நாடறியும் கவி
வித்தகன் விதையானான் !

எழுதியவர் : மொழிலினி (10-Sep-20, 6:11 pm)
சேர்த்தது : Babeetha- மொழிலினி
Tanglish : baarathi
பார்வை : 271

சிறந்த கவிதைகள்

மேலே