கரகாட்டம்
*அ*ம்மாளுக்கு ஆடும் கரகமடா;
*ஆ*திக்காலத்து குடக்கூத்தடா;
*இ*றைவனின் படைப்படா;
*ஈ*டுபாட்டின் உச்சமடா;
*உ*ச்சிவேளையும் பாராமல்,
*ஊ*ரசுத்தியாடும் கரகமடா;
*எ*ட்டுத்திக்கும் ஓசைக்கேட்டு,
*ஏ*ழ்மைனு நினைக்காம,
*ஐ*யாயிரம் காசபாத்து ,
*ஐ*நூருக்கு ஆடி,
*ஐ*ம்பது கூட மிச்சமில்ல,
*ஒ*ருவேளை கஞ்சிக்கு;
*ஓ*நாய் பார்வையின் மத்தியில்,
ஆட்டமாடிய கலைங்கர்களுக்கு,
*ஔ*தும்பரம்(செம்பு)தான் மிச்சமானது;
ஆடும் கரகத்துல,
அசைபோட்டு பாக்கனும்ங்க;
அவதரிச்ச நாள்ல;
அடுத்த அடி விழுறதுக்குள்ள,
அ*ஃ*தே காக்கணுங்க கரகாட்டத்த;
கரகமட்டுமில்லிங்க அது ;
நம் முப்பாட்டனின் முளைப்பாரி சொத்துங்கூட;
மீட்க வாரீரோ இளந்தளிர்களே?