IPL
கோலிகள் கோடிகள் சேர்க்க...
ஐபிஎல்லு! ஐ... பீ ... அல்லு!
விளம்பர வாழ்வை வளர்த்தெடுக்க...
ஐபிஎல்லு! ஐ... பீ ... அல்லு!
பெருமைக்கென்றே புறணி பேச...
ஐபிஎல்லு! ஐ... பீ ... அல்லு!
பணங்கொழுத்த பன்றிகள் மேய...
ஐபிஎல்லு! ஐ... பீ ... அல்லு!
பிராண்ட்- களை புரமோட் பண்ண...
ஐபிஎல்லு! ஐ... பீ ... அல்லு!
கிரிக்கெட்களை வணிகம் ஆக்க...
ஐபிஎல்லு! ஐ... பீ ... அல்லு!
பொழுதுகளை ஒழித்துக் கட்ட...
ஐபிஎல்லு! ஐ... பீ ... அல்லு!
நுகர்வுப் பண்பு பெருக்கெடுக்க...
ஐபிஎல்லு! ஐ... பீ ... அல்லு!
பொதுநலத்தை மறக்க வைக்க...
ஐபிஎல்லு! ஐ... பீ ... அல்லு!
இளைஞர் மனதை சீரழிக்க...
ஐபிஎல்லு! ஐ... பீ ... அல்லு!
கோமாளிகள் ஏமாளி ஆக்க...
ஐபிஎல்லு! ஐ... பீ ... அல்லு!
படித்தவனை பைத்தியம் ஆக்க...
ஐபிஎல்லு! ஐ... பீ ... அல்லு!
சிந்தனையைச் சிதறச் செய்ய...
ஐபிஎல்லு! ஐ... பீ ... அல்லு!
ஆடுகளத்தை அசிங்கமாக்க
ஐபிஎல்லு! ஐ... பீ ... அல்லு!
கூட்டாட்டத்தை சூதாட்டம் ஆக்க
ஐபிஎல்லு! ஐ... பீ ... அல்லு!