காதல்

ஒருவரால் நீங்கள்
ஆழமாக நேசிக்கப்படுவது
உங்களுக்கு பலத்தைத் தருகிறதென்றால்,
அதே நேரத்தில்
ஒருவரை நீங்கள் ஆழமாக நேசிப்பதும்
உங்களுக்கு அதிகமான
தைரியத்தைத் தருகிறது...!!!

ஒருபோதும்
நேசிக்காமல் இருப்பதைவிட
நேசித்து அதனை
இழந்தபின்பு வரும்
வலி கூட
இங்கு இனிமையே..!!!

சில காதல் கதைகள்
ஒருபோதும் காவிய
நாவல்கள் ஆவதில்லை,
அவையனைத்தும்
சிறுகதைகளாகவே முற்றுப்பெறுகின்றன....!!!

எழுதியவர் : சிவசங்கரி (21-Sep-20, 2:23 pm)
சேர்த்தது : Sivasankari
Tanglish : kaadhal
பார்வை : 190

மேலே