அர்த்தமுள்ள சொற்கள் சொற்கள் மாலை கவிதை

இசை மேதை தான்சென்...
இசை ஞானி இவர் பாடகரும்
இவர் பாடிய ராகம் உயிர் அலைகள்
தந்தன போலும்... இவர் பாடிய
'மேக மல்ஹர்' ராகம் மழைத் தந்ததென்பர்
பக்தி வெள்ளம் பேருக்கும் நம் தமிழின்
திவ்ய பிரபந்தங்கள், தேவாரம்
இவை மந்திர சக்தி கொண்டவை
பக்தியுடன் பாடிட பிணி தீர்க்கும்
நல்ல எண்ணங்கள் நவிலும்
ஒழுக்கம் நல்கிடும் இம்மை மறுமைக்கும் மருந்து இவை
அழகு தமிழ் சொற்களை முறையாக கோர்த்தால்
செய்யுள் மாலைகள் தொடுத்திடலாம்
கொச்சை மொழியில் அர்த்தமில்லா
'கவிதைகள்' எழுதுவது பாவம்

நல்ல கருத்து பாக்கள் என்றும்
மந்திர பூச்சரங்கள் ....
மந்திர சொற்கள் நாகத்தின் விஷத்தையும்
போக்கிவிடும் வாழவைக்கும்

நல்ல கவிதைகள் எழுதுவோம்
நலம் வளர்க்க ஒழுக்கம் தழைக்க

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (22-Sep-20, 7:54 pm)
பார்வை : 87

மேலே