அழகு பெண்களை அலர

தண்ணீரை காசாக்கும் தந்திர வித்தைக் கற்றவர்கள்
தரணியில் வாழும் ஆறறிவு பெற்ற ஆளுமைகள்
தொலைகாட்சியில் பட்டிமன்றத்தைக்கேட்டு
தொடைத்தட்டிக் கொண்டு தொண்றாற்ற துணியும் மன்னர்கள்
ஆபாசத்துக்கு எதிராய் ஆர்ப்பாட்டம் செய்து விட்டு
அழகு பெண்களை அலர கற்பழிக்கும் நீதிக்காரர்கள்
புகைநுழையா இடத்திலும் போதைக்கடையைத்திறந்து
போதிக்கும் ஆசிரியருக்கு கூலி கொடுப்பதாய் கொக்கரிப்பவர்கள்
காசின் பக்கம் மட்டுமே அரசின் கருணைப் பார்வை பார்த்து
காலந்தோறும் கோலோச்ச நினைக்கும் கோமான்கள்
தீர்த்து வைக்கும் தீர்வை திறம்பட செய்யாமல்
நீர்க்க வைக்கும் நெடிய வித்தை கற்ற வித்தகர்கள்
சாலவும் தெரியாமல் சான்றோர் சொல்லும் கேட்காமல்
சுழியத்தின் அளவில் சுற்றியே ஆட்சி செய்யும் சூரர்கள்
வாழ நாம் பிறப்பெடுத்தோம் வம்பின்றி வாழ முயல்வோம்
ஆழ நாம் சிந்தித்தோம் எனில் அத்திப்பழ கதையே ஆகும்.
-------- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (25-Sep-20, 10:52 am)
பார்வை : 30

மேலே