கருணை காட்டக் கூடாதா
அண்ணன் , தம்பியோட
நீ பொறந்திருந்தா
அரவணைக்க உனக்கு
தெரிஞ்சிருக்கும்
நானே இராசா,
நானே மந்திரியென
நேரம் தவறாம
நேர்மையா நீ உழைச்சு
நாள் முழுதும் வீனா
நீ ஊர் சுத்திரியே
மக்களின் துயரை
மனசாலும் நினைக்கலையே
கோடை வெய்யிலின்
கொடூரத்தை போக்கி
வெப்பத்தைக் குறைத்து
வாழவைக்கக் கூடாதா ?
கதிகலங்கி நிற்கும் மக்களுக்குக்
கருணை காட்டக் கூடாதா .