நினைக்காதே எப்போதும்

அகிலம் போற்றும்
ஆதவனே, மாயவனே—உன்
அருள் விழி ஈரத்தால்
அனைவரும் உயிர் வாழ
கொடை போல நீ
கொடுத்த வரத்தால்

கொட்டி தீர்த்த மழை
கரை புரண்டு ஓட
கட்டிய வீடும் , பொருளும்
கால்நடை ஜீவன்களும்
ஆற்று வெள்ளத்தில்
அடித்து செல்ல

அனைத்து உயிர்களுக்கும்
ஆதாரம் நீயென்று
குடிக்க நீரும், வெப்பத்தை போக்கவும்
கும்பிட்டு வேண்டினோம்
நீயோ அனைத்தையும் அழித்து எங்களை
நடு வீதியில் நிற்க வைத்தாயே

ஆதவனே, முதல்வனே
ஆணவம் எதற்கு உனக்கு?
அரவணைத்துக் காக்க
அளவோடு தந்தால் போதாதோ !
நானே இராசா, நானே மந்திரியென
நினைக்காதே எப்போதும்

எழுதியவர் : கோ. கணபதி. (25-Sep-20, 10:58 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 55

மேலே