முதுமொழிக் காஞ்சி 95

குறள் வெண்செந்துறை

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
வாழ்க்கை வேண்டுவோன் சூழ்ச்சி தண்டான். 5

- தண்டாப் பத்து, முதுமொழிக் காஞ்சி

பொழிப்புரை:

வாழ்தலை மேன்மேலும் விரும்பிய ஒருவன் தான் எடுத்த தொழிலை ஆராய்தல் ஒழியான்.

பொருளுரை:

நல்வாழ்க்கையை மேன்மேல் விரும்புமவன் எடுத்த தொழிலைத் தக்கவரோடு ஆராய்ச்சி செய்தலைத் தவிர்க்க மாட்டான்.

நல்வாழ்க்கைக்கு அவசியமானது காரியசித்தி: ஆகவே எடுத்த காரியம் நன்கு முடிதற்கான ஆராய்ச்சிகளைச் செய்வது ஒருதலை.

'தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்(கு)
அரும்பொருள் யாதொன்றும் இல்.' - திருக்குறள்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Sep-20, 10:37 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 85

சிறந்த கட்டுரைகள்

மேலே