முதுமொழிக் காஞ்சி 96

குறள் வெண்செந்துறை

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
மிகுதி வேண்டுவோன் வருத்தந் தண்டான். 6

- தண்டாப் பத்து, முதுமொழிக் காஞ்சி

பொழிப்புரை:

அளவுமிக்க பொருள் வேண்டுவோன் முயற்சி வருத்தமென நீக்கான்.

பொருளுரை:

அளவுமிக்க பொருளை விரும்புகின்றவன் அதற்குரிய முயற்சி செய்வதில் உண்டாகின்ற வருத்தம் கொண்டு அம்முயற்சியைத் தவிரான்.

'தகுதி தண்டான்' பாடபேதம்.

பெருமையை விரும்புகின்றவன் நல்லொழுக்கத்தினின்று தவிரான் என்பது பொருள்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Sep-20, 9:36 pm)
பார்வை : 87

சிறந்த கட்டுரைகள்

மேலே