என்றாவது ஒருநாள் உன் காதலோடு 555

***என்றாவது ஒருநாள் உன் காதலோடு 555 ***

என்னுயிரே...


தேர்வு அறையில்
வினாத்தாளை
வைத்து கொண்டு...

விடை தெரியாமல் காத்திருக்கும்
மாணவனை போல...

நான் காத்திருக்கிறேன்...


என் கேள்விகளின் பதில்
உன்னிடத்தில் மட்டுமே...

உன்னை ஓவியமாக
வரைந்து வைக்க ஆசைதான்...

தூரிகை பிடிக்க
தெரியாதவன் நான்...

வசந்த மண்டபம்
அமைத்துவிட்டேன் உனக்காக நான்...

உன்னுடன் நான்
துயில்
கொள்ள வேண்டுமடி...


என் மீது
உனக்கு
இரக்
கமில்லையா...

ஒவ்வொரு நாளும் உன்னை
தள்ளி நின்று ரசிக்கிறேன்...

என்றாவது ஒருநாள்
உன் காதலோடு...

என் அருகில்
வரமாட்டாயா காத்திருக்கிறேன்...

ஒவ்வொரு வினாடியும் நான்
உன்னை நினைத்துக்கொண்டு.....


எழுதியவர் : முதல் பூ பெ.மணி (28-Sep-20, 9:22 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 732

மேலே