என்னை அனாதையாக்கி விடாதே 555

***என்னை அனாதையாக்கி விடாதே 555 ***


பெண்ணே...



நீ எனக்கு அவமானங்கள்
பல கொடுத்தாலும்...

உன்னையே நான்
தேடிதேடி வருவதால்...

வலிகளை கொடுத்து
கொண்டே இருக்கிறாய் எனக்கு...

உன்னை
விட்டு
விடவும் மனமில்லை...

என்னை நான் தொலைத்து
விடவும் தைரியம் இல்லை...

என் மௌனம் உனக்கு
ஏளனமாக தெரியலாம்...

என்மனம் உன்னை மட்டும் நேசிக்கும்
மறந்துவிடாதே எப்போதும் நீ...

உன் அன்புக்கு
ஆசைப்பட்டு காத்திருக்கிறேன்...


என்னை
அனாதையாக்கி விடாதே...

கனவு போல
கரைந்து செல்கிறது...

என் ஆசைகள் எல்லாம்
நீ கொடுக்கும் வலிகளில்.....


எழுதியவர் : முதல் பூ பெ.மணி (1-Oct-20, 9:14 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 903

மேலே